Settings

முகப்பு/செய்திகள்/நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 99-வது பிறந்த நாள் – உருவப்படத்திற்கு மரியாதை
செய்திகள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 99-வது பிறந்த நாள் – உருவப்படத்திற்கு மரியாதை

🕒 1 அக்., 2026, 07:46 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 99-வது பிறந்த நாள் – உருவப்படத்திற்கு மரியாதை
✨

AI Highlights

  • •நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலியில் சிவாஜி சமூக நல பேரவை சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு, சிவாஜி சமூக நல பேரவை சார்பில் அவரது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

திருநெல்வேலி போக்குவரத்து ஐ.என்.டி.யூ.சி. அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ஐ.என்.டி.யூ.சி. கண்ணன், காசிமோகன், பிரபு மன்றத் தலைவர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் மாநகர் மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன் சிவாஜி கணேசனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தணிக்கை அரசு, செயலாளர் ஹரிராம், சமூக நல பேரவை செயலாளர் இசக்கி பிரபு, மன்ற செயலாளர் சுப்பிரமணியன், விக்ரம் பிரபு மன்றத் தலைவர் கணேசன், பாளை சேகர், வாழப்பாடி முருகன், பத்தமடை மாயாண்டி, சிவாஜி அய்யாதுரை பாண்டியன், தச்சை வேலு, தாழை பிரபு, முருகன் சிவாஜி, தச்சை செல்லபாண்டியன், ராஜாமணி சிவாஜி, முருகன், தசை மாணிக்கவாசகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, பங்கேற்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔