சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/மகளிர் சுய உதவிக்குழு கல்லூரி சந்தை தொடக்கம் – 3 கல்லூரிகளில் நடைபெறுகிறது
செய்திகள்

மகளிர் சுய உதவிக்குழு கல்லூரி சந்தை தொடக்கம் – 3 கல்லூரிகளில் நடைபெறுகிறது

🕒 29 செப்., 2026, 07:46 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
மகளிர் சுய உதவிக்குழு கல்லூரி சந்தை தொடக்கம் – 3 கல்லூரிகளில் நடைபெறுகிறது
✨

AI Highlights

  • •அரியலூர் தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் சுய உதவிக்குழு கல்லூரி சந்தையை ஆட்சியர் மிருணாளினி தொடங்கி வைத்தார். 3 கல்லூரிகளில் சந்தை நடைபெறுகிறது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கவும், பொருட்களின் விற்பனை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்குவிக்கவும் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கல்லூரி சந்தை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம் தத்தனூரில் உள்ள மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பல்வேறு உற்பத்திப் பொருட்களை பார்வையிட்டார்.

7,286 சுய உதவிக்குழுக்கள் செயல்பாடு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 6,379 சுய உதவிக்குழுக்களும், நகர்ப்புற பகுதிகளில் 907 சுய உதவிக்குழுக்களும் என மொத்தம் 7,286 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

நடப்பு நிதியாண்டில் ஊரகப் பகுதிகளில் 1,960 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.185.51 கோடி வங்கி கடன் இணைப்பும், நகர்ப்புற பகுதிகளில் 267 குழுக்களுக்கு ரூ.22.84 கோடி வங்கி கடன் இணைப்பும் பெறப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த 1,485 சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் 508 குழுக்களுக்கு ரூ.44.81 கோடி வங்கி கடன் இணைப்பு பெறப்பட்டுள்ளது.

22 குழுக்களுக்கு ரூ.33 லட்சம் நிதி

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 2026–27 ஆம் ஆண்டில் சமுதாய முதலீட்டு நிதியாக ஒரு குழுவுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதம் 22 குழுக்களுக்கு மொத்தம் ரூ.33 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்துதல், அவற்றை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துதல், கல்லூரி மாணவர்களின் கருத்துகளைப் பெறுதல் மற்றும் மாணவர்களிடம் சுய உதவிக்குழு தயாரிப்புகளை கொண்டு சேர்த்தல் ஆகிய நோக்கங்களுடன் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி சந்தை நடத்தப்படுகிறது.

3 கல்லூரிகளில் கல்லூரி சந்தை

அரியலூர் மாவட்டத்தில் 2026–27 நிதியாண்டில் 3 கல்லூரி சந்தைகள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் கல்லூரி சந்தை செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 1-ஆம் தேதி வரை 3 நாட்கள் தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

இரண்டாவது கல்லூரி சந்தை அக்டோபர் 13 முதல் 15-ஆம் தேதி வரை அரியலூர் அரசு கலைக் கல்லூரியிலும், மூன்றாவது கல்லூரி சந்தை அக்டோபர் 27 முதல் 29-ஆம் தேதி வரை நெல்லியாண்டவர் பொறியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர்கள் கார்த்திகேயன், கௌதம், தொடர்புடைய துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔