சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/வேலூர் ஐஸ் ஆலையில் அமோனியா வாயு கசிவு: உரிமையாளர் கைது!
செய்திகள்

வேலூர் ஐஸ் ஆலையில் அமோனியா வாயு கசிவு: உரிமையாளர் கைது!

🕒 15 ஆக., 2026, 09:59 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
வேலூர் ஐஸ் ஆலையில் அமோனியா வாயு கசிவு: உரிமையாளர் கைது!

AI Highlights

  • வேலூர் மாங்காய் மண்டி ஐஸ் ஆலையில் பயங்கர அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அனுமதியின்றி இயங்கிய ஆலை உரிமையாளர் கைது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வேலூர் மாவட்டம் முள்ளிப்பாளையம் மாங்காய் மண்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பார் ஐஸ் தயாரிப்பு தொழிற்சாலையில் சோதனை ஓட்டத்தின் போது அமோனியா வாயு கசிந்ததால் தொழில்நுட்ப நிபுணர் உள்ளிட்ட பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் மற்றும் காயம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கஸ்பாவைச் சேர்ந்த அக்பரின் மகன் இக்ரம், குளிர்பான கடைகளுக்கு பார் ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலையை அமைத்திருந்தார். நாள் ஒன்றுக்கு 10 டன் ஐஸ் தயாரிக்கும் திறன் கொண்ட இந்த ஆலையில் நேற்று மாலை சோதனை இயக்கம் நடைபெற்றபோது, அமோனியா சிலிண்டருடன் இணைக்கப்பட்ட குழாயில் திடீரென கசிவு ஏற்பட்டது. இதனால் சில நிமிடங்களிலேயே தொழிற்சாலை முழுவதும் வாயு பரவி, அங்கு பணியாற்றியவர்களுக்கு கடுமையான கண் எரிச்சல் ஏற்பட்டது.

வாயு தொழிற்சாலைக்கு வெளியேயும் பரவியதால் மாங்காய் மண்டி பகுதியிலிருந்த பொதுமக்களுக்கும் கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. தகவலறிந்து வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்ல் மார்க்ஸ் தலைமையிலான வீரர்கள் பாதுகாப்பு முகமூடி அணிந்து ஆலைக்குள் நுழைந்து கசிந்த சிலிண்டரின் வால்வை மூடினர்.

மேலும், அங்கு இருந்த 50 கிலோ எடையுடைய ஆறு அமோனியா சிலிண்டர்களிலிருந்த வாயுவை தண்ணீரில் கரைத்து ஆபத்தில்லாத நிலைக்கு மாற்றும் பணியில் தீயணைப்புத்துறையினரும் தொழில்நுட்ப நிபுணர்களும் பல மணி நேரம் ஈடுபட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர் ஜெயக்குமார் கண் எரிச்சலால் கீழே விழுந்து லேசான காயமடைந்தார். மேலும், சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த முதியவர் ஜெயராஜ் (63) கடுமையாக பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பாதுகாப்பு நடவடிக்கையாக தொழிற்சாலை சுற்றுவட்டார சாலைகளில் வாகன போக்குவரத்துக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

வேலூர் வடக்கு போலீசார் நடத்திய விசாரணையில், தொழிற்சாலை அரசின் உரிய அனுமதி பெறாமல் தொடங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தொழிற்சாலை உரிமையாளர் அக்பரின் மகன் இக்ரம் கைது செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔