சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/ஆட்சியின் 100 நாள் சாதனைகள்: முதல்வர் விஜய் வெளியிட்ட வீடியோ!
செய்திகள்

ஆட்சியின் 100 நாள் சாதனைகள்: முதல்வர் விஜய் வெளியிட்ட வீடியோ!

🕒 18 ஆக., 2026, 09:49 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஆட்சியின் 100 நாள் சாதனைகள்: முதல்வர் விஜய் வெளியிட்ட வீடியோ!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்ட முக்கிய திட்டங்கள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“100 நாள் ஆட்சி – ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அரசின் முக்கிய நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இதில், 717 மதுபானக் கடைகள் மூடல், போதைப்பொருள் ஒழிப்புக்காக 65 சிறப்பு அதிரடிப்படைகள் அமைத்தல், விவசாயிகளுக்கு ரூ.6,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000 மற்றும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,750 சிறப்பு ஊக்கத்தொகை உள்ளிட்ட திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், 200 யூனிட் இலவச மின்சாரம், வெற்றி வீடு திட்டத்திற்கு ரூ.3,500 கோடி, 150 நாட்கள் உத்தரவாத வேலைவாய்ப்பு திட்டம், வெற்றி மடிக்கணினி திட்டத்திற்கு ரூ.2,000 கோடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், பெண்கள் நலன், கிராமப்புற வளர்ச்சி மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் முதல்வர் விஜய் தனது 100 நாள் ஆட்சி வீடியோவில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 2026 முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.1 லட்சம் கோடி முதலீட்டு உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔