இந்தியா
மாதனூரில் தூய்மை பணியாளர்கள், விவசாயிகள்,தவெக நிர்வாகிகள் என 500 பேருக்கு 11 லட்சம் பாதிப்பீட்டில் பட்டாசுகள் , இனிப்புகள் வழங்கி , 1000 பேருக்கு,பிரியாணி பரிமாறி உபசரித்த தவெக ஒன்றிய செயலாளர்
🕒 8 நவ., 2026, 01:47 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் மாதனூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் தூய்மை பணியாளர்கள், விவசாயிகள் தவெக நிர்வாகிகள் ,மகளிர் அணி என 500க்கும் மேற்பட்டோருக்கு 11 லட்சம் மதிப்பிலான பட்டாசு, இனிப்பு, காரம் உள்ளிட்ட பரிசு பொருட்களை தமிழக வெற்றி கழக மாதனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பார்த்தசாரதி வழங்கி அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார் மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ,நரிக்குறவர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு பிரியாணி பரிமாறினார். இதில் தமிழக வெற்றிக்கழக தொழிற்சங்க நிர்வாகி மனோஜ்,
ஒன்றிய நிர்வாகிகள்,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.








