Settings

முகப்பு/செய்திகள்/மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்
செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

🕒 22 நவ., 2026, 12:29 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம் - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •தஞ்சாவூர் விளார் பகுதியில் கரும்புத் தோட்டத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட புள்ளிமான், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. வாகன விபத்தில் மான் காயமடைந்திருக்கலாம் என சந்தேகம்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே விளார் பகுதியில் கரும்புத் தோட்டத்தில் காயங்களுடன் மயங்கிக் கிடந்த புள்ளிமானை இளைஞர்கள் மீட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அது உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், விளார் பகுதியில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் அருகே உள்ள கரும்புத் தோட்டத்தில், புள்ளிமான் ஒன்று மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள், உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், அந்த மானை மீட்டு தஞ்சாவூர் ரெட்டிபாளையம் அரசு கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், கால்நடை மருத்துவர்கள் மானுக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மான் பரிதாபமாக உயிரிழந்தது. முதற்கட்ட விசாரணையில், சாலை வழியாகச் சென்ற வாகனம் மோதியதில் மான் காயமடைந்திருக்கலாம் என்றும், வலியுடன் கரும்புத் தோட்டத்திற்குள் தஞ்சம் புகுந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த மானுக்குப் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, வனத்துறை விதிகளின்படி உடல் அடக்கம் செய்யப்பட்டது. மானை மீட்க இளைஞர்கள் மேற்கொண்ட முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், வனவிலங்குகள் சாலைகளைக் கடக்கும்போது வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!செய்திகள்

சொகுசு காரில் குட்கா கடத்தல்: ஈரோட்டில் அதிரடி வேட்டை!

Dinesh🕒 நவ. 22
குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!செய்திகள்

குண்டும் குழியான சாலைகளால் திணறும் பொதுமக்கள்! உடனடியாக சீரமைக்க கோரிக்கை!

NESARAJAN🕒 நவ. 22
ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!செய்திகள்

ECR சாலையில் அதிரடி வேட்டை: 31 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது!

NESARAJAN🕒 நவ. 22
திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கைசெய்திகள்

திருவாரூரில் 18 மாதங்களாகப் பூட்டிக் கிடக்கும் நீச்சல் குளம்: புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

NESARAJAN🕒 நவ. 22
பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!ஆன்மீகம்

பழனி திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கோயில் நிர்வாகம்!

VASANTHA🕒 நவ. 22
11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!அரசியல்

11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!

VASANTHA🕒 நவ. 22
இருக்கன்குடி கோயிலில் 1 கி.மீ நீள வரிசை: பக்தர்களின் நேர்த்திக்கடனை பாதிக்கும் புதிய நடைமுறை!நகரங்கள்

இருக்கன்குடி கோயிலில் 1 கி.மீ நீள வரிசை: பக்தர்களின் நேர்த்திக்கடனை பாதிக்கும் புதிய நடைமுறை!

Ramkumarsamy🕒 நவ. 22
காவல்துறையினர் மீது திடுக்கிடும் புகார்! தேனி எஸ்.பி. அலுவலகத்தில் பெண் கண்ணீர்!செய்திகள்

காவல்துறையினர் மீது திடுக்கிடும் புகார்! தேனி எஸ்.பி. அலுவலகத்தில் பெண் கண்ணீர்!

Rajesh Priyan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔