சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/பொழுதுபோக்கு/ரசிகர்களின் அன்பு விலைமதிப்பற்றது – நடிகை கீர்த்தி சுரேஷ்
பொழுதுபோக்கு

ரசிகர்களின் அன்பு விலைமதிப்பற்றது – நடிகை கீர்த்தி சுரேஷ்

🕒 21 செப்., 2026, 07:05 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ரசிகர்களின் அன்பு விலைமதிப்பற்றது – நடிகை கீர்த்தி சுரேஷ்

AI Highlights

  • சினிமாவில் வெற்றிகள், தோல்விகள் வந்தபோதும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். ரசிகர்களின் அன்பு விலைமதிப்பற்றது என்றும் கூறினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நடிகை கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகப் பயணத்தை தொடங்கிய கீர்த்தி சுரேஷ், 2015-ஆம் ஆண்டு ஏ.எல். விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’, ‘பைரவா’, ‘சர்கார்’, ‘அண்ணாத்த’, ‘மாமன்னன்’, ‘சைரன்’, ‘ரகு தாத்தா’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி தனது நீண்டநாள் நண்பரும் தொழிலதிபருமான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துகொண்ட கீர்த்தி சுரேஷ், அதன் பிறகும் திரையுலகில் தொடர்ந்து பயணித்து வருகிறார். அவரது நடிப்பில் ‘டோரதி’ திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும், நானியுடன் இணைந்து நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படமும் அடுத்தடுத்த வெளியீடுகளுக்காக தயாராகி வருகிறது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ் தனது ரசிகர்கள் குறித்து பேசியுள்ளார். சினிமாவில் வெற்றிகளும் தோல்விகளும் வந்தபோதிலும், ரசிகர்கள் தொடர்ந்து தனக்கு ஆதரவு அளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பணம் மற்றும் புகழை விட ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பு விலைமதிப்பற்றது என்றும், அந்த அன்பை தொடர்ந்து பெறுவதில் தான் அதிர்ஷ்டசாலியாக உணர்வதாகவும் கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

மேலும், திரையுலகில் இருப்பதையே பெருமையாக கருதுவதாக அவர் தெரிவித்த கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔