தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் கல்வியறிவு குழு நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி பிரஸ் கிளப் பொருளாளர் ஜெ.ராஜுவின் மகள் அபிநயாவிற்கு, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் கல்வியறிவு குழு சார்பில் மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். போட்டிகளின் இறுதிச்சுற்று முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், சிறந்த முறையில் பதிலளித்து வெற்றி பெற்ற அபிநயாவுக்கு, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இ.ஆ.ப. நேரில் அழைத்து கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின் போது, தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்ன ராணி மற்றும் கல்வித்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். வெற்றி பெற்ற மாணவி அபிநயாவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நகரங்கள்
மாவட்ட ஆட்சியர் கைகளால் பாராட்டு பெற்ற பிரஸ் கிளப் நிர்வாகியின் மகள்!
🕒 25 நவ., 2026, 11:11 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •தூத்துக்குடியில் தேர்தல் கல்வியறிவு குழு நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற பிரஸ் கிளப் பொருளாளர் ஜெ.ராஜுவின் மகள் அபிநயாவிற்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேடயம் வழங்கினார்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








