தமிழகம்–கேரள எல்லையில் அமைந்துள்ள மலைக்கிராமம் ஒன்றில், 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜூன் மாதத்தில் ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு வனதேவதையின் சாபம்தான் காரணம் என கிராம மக்கள் நம்புகின்றனர்.
இந்த நிலையில், அந்த கிராமத்திற்கு இன்ஸ்பெக்டராக வரும் சித்து, மக்கள் கூறும் நம்பிக்கைகளை ஏற்க மறுக்கிறார். இதற்கிடையே இளம்பெண் ஒருவர் திடீரென காணாமல் போக, சித்து விசாரணையில் இறங்குகிறார்.
விசாரணையின் போது ஒரு இளைஞர் மீது சந்தேகம் ஏற்படுகிறது. அவரைத் தேடும் சூழலில், காணாமல் போன பெண்ணின் தோழியும் மாயமாகிறார். பின்னர் காணாமல் போன மூவரும் ஒரே இடத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்படுகின்றனர்.
தொடர்ந்து நடைபெறும் கொலைகளின் பின்னணியில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க சித்து தீவிர விசாரணை மேற்கொள்கிறார். இந்த சூழலில் அவரது மனைவியும், மற்றொரு இளைஞரும் கொலை செய்யப்படுகின்றனர். தொடர் கொலைகளுக்கான காரணம் என்ன? இதன் பின்னணியில் இருப்பது யார்? என்பதற்கான பதில்களை நோக்கி கதை நகர்கிறது.
நடிப்பில் கவரும் சித்து
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நாயகனாக அறிமுகமாகியுள்ள சித்து, தனது முதல் படத்திலேயே கவனம் ஈர்க்கும் வகையில் நடித்துள்ளார். அதிக வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், முகபாவனைகள் மூலம் கதாபாத்திரத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் அவரது நடிப்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
சித்துவின் மனைவியாக தர்ஷிகாவும், மலைக்கிராமத்து பெண்ணாக ரித்விகாவும் தங்களது கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக நடித்துள்ளனர். பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி.சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு உள்ளிட்டோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரங்களில் சிறப்பாக பங்களித்துள்ளனர்.
தொழில்நுட்பத்தில் பலம்
பி.கே. மணிகண்டனின் ஒளிப்பதிவு மலைக்கிராமத்தின் சூழலையும், படத்தின் மர்மமான பின்னணியையும் சிறப்பாக பதிவு செய்கிறது. சக்தி பாலாஜியின் இசையும் திரில்லர் கதைக்களத்துடன் இணைந்து பயணிக்கிறது.
கதையில் அடுத்ததாக என்ன நடக்கும் என்பதை எளிதில் கணிக்க முடியாத வகையில் திருப்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடக்கம் முதல் இறுதி வரை சஸ்பென்ஸை தக்கவைத்துக்கொண்டு திரைக்கதை நகர்வது படத்தின் முக்கிய அம்சமாக உள்ளது.
வழக்கமான கிரைம்–திரில்லர் கதைக்களத்தை எடுத்துக்கொண்டாலும், அதை சற்று வித்தியாசமான களத்தில் கொண்டு செல்ல இயக்குனர் பாலாஜி முயன்றுள்ளார். குறிப்பாக படத்தி

