இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘வேட்டுவம்’. இப்படத்தில் ஆர்யா, அட்டகத்தி தினேஷ், சோபிதா துலிபாலா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகும் இப்படம் அறிவியல் புனைவு அம்சங்களையும் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் படத்தின் உலகத்தை அறிமுகப்படுத்தும் வீடியோ ‘வேர்ல்ட் ஆஃப் வேட்டுவம்’ (World of Vettuvam) என்ற பெயரில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ மூலம் படத்தின் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 5 நிமிடங்கள் இடம்பெறும் இந்த அறிமுக வீடியோவில், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய மூன்று காலகட்டங்களுடன் தொடர்புடைய உலகத்தைப் பற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ‘வேட்டுவம்’ படத்தின் தனித்துவமான உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த படக்குழு முயன்றுள்ளது.
இதற்கு முன்பு நடிகர் தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு ‘வேட்டுவம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. தற்போது வெளியாகியுள்ள புதிய அறிமுக வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

