இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘சார்பட்டா பரம்பரை 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன.
நீலம் புரொடக்ஷன் நிறுவனத்தின் மேலாளர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில், “காட்சி 1, நாள் 1, டேக் 1” என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட கதையாக உருவானது. பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களும் ரசிகர்களின் கவனத்தை பெற்றன.
ப்ரீக்வெல் கதையாக உருவாகும் ‘சார்பட்டா பரம்பரை 2’
‘சார்பட்டா பரம்பரை 2’ திரைப்படம் முதல் பாகத்தின் நேரடி தொடர்ச்சியாக இல்லாமல், அதற்கு முந்தைய காலகட்டத்தில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்ட ப்ரீக்வெல் கதையாக உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1940 மற்றும் 1950-களின் சென்னை பின்னணியில் குத்துச்சண்டை கலாச்சாரம், அக்கால சமூக வாழ்க்கை மற்றும் அரசியல் சூழலை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளதால் ‘சார்பட்டா பரம்பரை 2’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

