சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்றும் (செப்டம்பர் 24) தங்கம் விலை குறைந்துள்ளது.
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,13,080-க்கும், ஒரு கிராம் ரூ.14,135-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்துள்ளது. இதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,12,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 3 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,280 அளவுக்கு குறைந்துள்ளது.
வெள்ளி விலையும் சரிவு
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 குறைந்து ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், தங்கம் மற்றும் வெள்ளி வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மத்தியில் இன்றைய விலை நிலவரம் கவனம் பெற்றுள்ளது.

