சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/வணிகம்/பொள்ளாச்சியில் ‘ஒளிரும் பொள்ளாச்சி’ திட்டம் – செப்.24ல் தொடக்க விழா
வணிகம்

பொள்ளாச்சியில் ‘ஒளிரும் பொள்ளாச்சி’ திட்டம் – செப்.24ல் தொடக்க விழா

🕒 22 செப்., 2026, 07:21 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பொள்ளாச்சியில் ‘ஒளிரும் பொள்ளாச்சி’ திட்டம் – செப்.24ல் தொடக்க விழா

AI Highlights

  • பொள்ளாச்சியை தூய்மையான, பசுமையான நகரமாக மாற்றும் நோக்கில் ‘ஒளிரும் பொள்ளாச்சி’ திட்டம் செப்.24ல் தொடங்கப்படுகிறது. கழிவு மேலாண்மை, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பொள்ளாச்சியை தூய்மையான, பசுமையான, ஆரோக்கியமான மற்றும் வளமான நகரமாக மாற்றும் நோக்கில், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில் பி.சி.சி.ஐ. வெல்ஃபர் அறக்கட்டளை மற்றும் ‘ஒளிரும் பொள்ளாச்சி’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் தொடக்க விழா செப்டம்பர் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் முத்துசாமி, செயலாளர் சபரி கண்ணன், பொருளாளர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

அப்போது பேசிய தலைவர் முத்துசாமி, கடந்த 45 ஆண்டுகளாக பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசு துறைகளை ஒருங்கிணைத்து மக்கள் சார்ந்த வளர்ச்சியை நோக்கமாக கொண்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சியை தூய்மையான மற்றும் பசுமையான நகரமாக மாற்றும் வகையில் ‘ஒளிரும் பொள்ளாச்சி’ திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தின் மூலம் தெருக்கள் மற்றும் பொது இடங்களை தூய்மையாக பராமரித்தல், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை முறையாக தரம் பிரித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்தப் பணிகளை செயல்படுத்துவதற்காக கோவை ராக், சிறுதுளி, ஒளிரும் கோவை உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்பட உள்ளதாக தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

‘ஒளிரும் பொள்ளாச்சி’ திட்டத்தின் தொடக்க விழா செப்டம்பர் 24-ம் தேதி கே.கே.ஜி. திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

செய்தியாளர் சந்திப்பின்போது திட்ட ஒருங்கிணைப்பாளர் அங்கு ராஜ், முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔