சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/விவசாயம்/நெல் கொள்முதல் தொகை 7 மாதங்களாக வழங்கப்படவில்லை: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
விவசாயம்

நெல் கொள்முதல் தொகை 7 மாதங்களாக வழங்கப்படவில்லை: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

🕒 21 செப்., 2026, 09:20 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நெல் கொள்முதல் தொகை 7 மாதங்களாக வழங்கப்படவில்லை: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

AI Highlights

  • நாங்குநேரி கீழக்காடுவெட்டி, தருவை அரசு நெல் கொள்முதல் மையங்களில் நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு 7 மாதங்களாக பணம் கிடைக்கவில்லை என புகார். நிலுவைத் தொகையை விரைந்து வழங்க கோரிக்கை.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்துக்குட்பட்ட கீழக்காடுவெட்டி, தருவை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை பல மாதங்களாக வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

கீழக்காடுவெட்டி மற்றும் தருவை பகுதிகளில் உள்ள அரசு நெல் கொள்முதல் மையங்களில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நெல் விற்பனை செய்து 7 மாதங்களுக்கு மேலாகியும் பல விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் அதற்கான தொகை வரவு வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதிய மழையின்மையால் நெல் சாகுபடியில் இழப்பை சந்தித்துள்ள நிலையில், விவசாயக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத சூழலில் இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

"பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை"

மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், கீழக்காடுவெட்டி மற்றும் தருவை நெல் கொள்முதல் மையங்களில் நெல் விற்பனை செய்த பல விவசாயிகளுக்கு 7 மாதங்களுக்கும் மேலாக பணம் கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஏற்கனவே பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் கூறினர். மேலும், கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் வருகை தொடர்பாக மனு பெறப்படாமல் சென்றதாகவும், தற்போது முதலமைச்சர் கூட்டம் இருப்பதாகக் கூறி ஆட்சியர் சென்றுவிட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்பதற்கு அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் போதிய நேரம் ஒதுக்குவதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர். தங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நெல் கொள்முதல் தொகையை விரைந்து வழங்க மாவட்ட நிர்வாகமும் அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔