பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி சி. விஜயலக்ஷ்மி அவர்கள், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12,134 பயனாளிகளுக்கு ரூ.3.44 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப. அப்துல் ராசிக் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கி. சிவக்குமார் கலந்துகொண்டார்.
பெரம்பலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் வழங்கப்பட்ட இந்த நலத்திட்ட உதவிகளின் விவரங்கள்:
- அரியலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் 3703 பயனாளிகளுக்கு ரூ.1,18,19,956 ஊக்கத் தொகை.
- கீழப்பழுவூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் 2895 பயனாளிகளுக்கு ரூ.47,82,149 ஊக்கத் தொகை.
- வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ஜெயங்கொண்டம் வட்டம் தத்தனூர் மற்றும் ஆண்டிமடம் வட்டம் கோவில் வாழ்க்கை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் வழங்க தலா ரூ.1,40,000 வீதம் நிதி உதவி.
- மினி டெய்ரி கடனுதவியாக 60 பயனாளிகளுக்கு ரூ.1,62,00,000 கடனுதவி.
- தாட்கோ திட்டத்தின் கீழ் கறவை மாட்டு கடனுதவியாக 2 நபர்களுக்கு ரூ.2,00,000.
- இடைக்கட்டு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பயனாளிகளுக்கு போனஸ் தொகையாக (2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளுக்கு) முறையே ரூ.4,93,353 மற்றும் ரூ.6,52,333 வழங்கப்பட்டது.
ஆக மொத்தம் ரூ.3,44,27,791 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

