திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கதிரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் வே.நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த முகாமில், தகுதியுடைய இளம் வாக்காளர்கள் மற்றும் முதன்முறையாக வாக்களிக்க உள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சேர்ப்பது மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.

