விருதுநகரில், சென்னை மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றக் கோரி 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
கடந்த 1895 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி பிறந்த தியாகி சங்கரலிங்கனார், தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றின் காரணமாக, சென்னை மாகாணம் என்ற பெயரினை மாற்றி 'தமிழ்நாடு' என்று சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தார்.
அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, கரிசல இலக்கிய கழகம், இந்திய கலாச்சார நட்புறவு கழகம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மற்றும் சமம் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் விருதுநகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

