நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த 3-ந்தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது. விழாவினையொட்டி கடந்த 2 நாட்களாகவே பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று அங்கு குடில்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தங்கியிருந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து கோவிலில் சொரிமுத்து அய்யனார் என்று அழைக்கப்படும் மகாலிங்க சுவாமி, சங்கிலி பூதத்தார் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் தாமிரபரணியில் நீராடி பொங்கலிட்டு வழிபடத் தொடங்கினர். தொடர்ந்து தீர்த்தவாரியும், சங்கிலி பூதத்தாருக்கு சிறப்பு படையலும் நடந்தது. அமப்போது தளவாய் மாடசாமி மற்றும் பட்டவராயன் சுவாமி கோவிலில் பக்தர்கள் சங்கிலியால் தங்கள் மீது அடித்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். தொடர்ந்து இன்று இரவு பூக்குழி திருவிழா நடக்கிறது. விழாவினையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தவண்ணம் உள்ளனர்
ஆன்மீகம்
சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை விழா!
The News Outlook
🕒 12 ஆக., 2026, 09:49 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
