தமிழகத்தில் முத்திரை சின்னமாக விளங்க கூடியதும் வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படக் கூடியது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர தேரோட்டம் திருவிழா என்பது விமர்சையாக கொண்டாடப்படும். தமிழக மட்டுமில்ல அது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்து தங்கள் நேர்த்திகடனை செலுத்தி விட்டு தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த ஆறாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத் திருவிழா நாளை நடைபெறுவதையொட்டி சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த நித்திய புஷ்ப கைங்கரிய சபா சார்பாக இந்த ஆண்டு இரண்டு டன் மலர்களால் ஆண்டாள் கோவிலில் கொடிமரம், கண்ணாடி மாளிகை, லட்சுமி நாராயண நந்தவனம், தேர் பல்வேறு பகுதியில் ஆர்கிட், சர்புராமினி, ப்ளூ டைல்ஸ், கோல்டன் ராடு, ஜெம்சம், ரோசஸ் என சுமார் இரண்டு டன்களில் ஆன மலர்களால் கட்டப்பட்டு கோவிலில் அலங்கரிக்கப்பட்டு காணப்படுகிறது. இந்த பணியில் சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டனர். பல்வேறு வண்ணங்களில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு காணப்படும் ஆண்டாள் கோவில் பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஆன்மீகம்
இரண்டு டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படும்..
The News Outlook
🕒 13 ஆக., 2026, 03:01 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

