Settings

முகப்பு/ஆன்மீகம்/தங்க மயில் வாகனத்தில் சிங்காரவேலவர் உலா மற்றும் சொக்கப்பனை காட்சி: பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த சிக்கல் கோவில்!
ஆன்மீகம்

தங்க மயில் வாகனத்தில் சிங்காரவேலவர் உலா மற்றும் சொக்கப்பனை காட்சி: பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த சிக்கல் கோவில்!

🕒 25 நவ., 2026, 10:29 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தங்க மயில் வாகனத்தில் சிங்காரவேலவர் உலா மற்றும் சொக்கப்பனை காட்சி: பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த சிக்கல் கோவில்! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் பெரிய கார்த்திகையை முன்னிட்டு தங்க மயில் வாகன வீதி உலா மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் பெரிய கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் கோலாகலமாக நடைபெற்றன.

விழாவை முன்னிட்டு நேற்று காலை சிங்காரவேலவர் கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து பால், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, வள்ளி-தெய்வானை சமேத சிங்காரவேலவர், சந்திரசேகரன் மற்றும் கோல வாமனப் பெருமாள் ஆகியோர் தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற முக்கிய நிகழ்வான சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் நாகப்பட்டினம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்திப் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

சொக்கப்பனை தத்துவம் மற்றும் ஐதீகம்:

பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தபோது, சிவபெருமான் அடிமுடி காண முடியாத பிரம்மாண்ட அக்னி ஸ்தம்பமாக (நெருப்புத் தூண்) காட்சியளித்தார். அந்த ஜோதி வடிவத்தை நினைவுகூரும் வகையிலேயே கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. மனித மனதில் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும், அறியாமை எனும் இருளையும் இறைவனின் ஞான ஒளியால் எரித்துச் சாம்பலாக்குவதே இதன் தத்துவமாகும்.

பனை மரத்தின் உச்சியில் எரியும் தீபத்தை தரிசிப்பதால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், சொக்கப்பனை எரிந்து முடிந்த பிறகு கிடைக்கும் கரியும் சாம்பலும் பக்தர்களால் புனிதப் பிரசாதமாக வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனைத் திருநீற்றுடன் கலந்து நெற்றியில் இட்டுக்கொள்வதாலும், விவசாய நிலங்களில் தூவுவதாலும் திருஷ்டி நீங்கி, பயிர்கள் செழித்துச் செல்வம் பெருகும் என்பது ஆன்மீக நம்பிக்கையாக உள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மழையை வென்ற பக்தி! திருவண்ணாமலையில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள் - மகா தீபத்திற்கு தயாராகும் மலை!ஆன்மீகம்

மழையை வென்ற பக்தி! திருவண்ணாமலையில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள் - மகா தீபத்திற்கு தயாராகும் மலை!

Manimaran🕒 நவ. 24
தீபத்திருவிழா: குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அடையாள அட்டைகள் அணிவிப்பு!ஆன்மீகம்

தீபத்திருவிழா: குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அடையாள அட்டைகள் அணிவிப்பு!

Manimaran🕒 நவ. 24
திருவண்ணாமலை மகா தீபம்: காடா துணிக்கு சிறப்பு வழிபாடு!ஆன்மீகம்

திருவண்ணாமலை மகா தீபம்: காடா துணிக்கு சிறப்பு வழிபாடு!

Nivedha🕒 நவ. 24
தீபத் திருவிழா: கொப்பரைக்கு பூஜை நடைபெற்றதால் பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு!ஆன்மீகம்

தீபத் திருவிழா: கொப்பரைக்கு பூஜை நடைபெற்றதால் பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு!

Vijay🕒 நவ. 24
சாதித்த அரசு அலுவலர்கள்! முதலமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டியில் தூத்துக்குடி அணிக்கு வெண்கலப் பதக்கம்!செய்திகள்

சாதித்த அரசு அலுவலர்கள்! முதலமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டியில் தூத்துக்குடி அணிக்கு வெண்கலப் பதக்கம்!

JOWIN AKASH🕒 நவ. 25
அதிக லாபம் தருகிறோம் என்று ஆசை வார்த்தை; திருச்சியில் நடந்த பகீர் ஆன்லைன் மோசடி!செய்திகள்

அதிக லாபம் தருகிறோம் என்று ஆசை வார்த்தை; திருச்சியில் நடந்த பகீர் ஆன்லைன் மோசடி!

MSD🕒 நவ. 25
கல்லூரிக்குள் புகுந்து மாணவன் மீது கட்டையால் தாக்குதல்: திருவாரூரில் பரபரப்பு!செய்திகள்

கல்லூரிக்குள் புகுந்து மாணவன் மீது கட்டையால் தாக்குதல்: திருவாரூரில் பரபரப்பு!

NESARAJAN🕒 நவ. 25
கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த பார்சல் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வைரல்!செய்திகள்

கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த பார்சல் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வைரல்!

SRIDHAR🕒 நவ. 25
TNO வாட்ஸ்அப் சானல் ➔