அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பராபவ ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று (24-11-2026, செவ்வாய்க்கிழமை) வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் வைபவத்தை முன்னிட்டு, இன்று மாலை 4.00 மணிக்கு மலைக்கோயிலில் சாயரட்சை பூஜை தொடங்கிச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சாயரட்சை பூஜை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அருள்மிகு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து மலைக்கோயிலின் நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், வெளிப்பிரகாரத்தில் உள்ள தங்கமயில் விநாயகர் (நின்ற விநாயகர்) சந்நிதி அருகே சின்னக்குமாரர் எழுந்தருளி நின்ற நிலையில், வேத மந்திரங்கள் முழங்கத் தீபத்தூணில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. மலைக்கோயிலில் பிரம்மாண்டமாக எரிந்த சொக்கப்பனை மற்றும் மகா தீபத்தைத் திரளான பக்தர்கள் 'அரோகரா' கோஷம் முழங்கப் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
ஆன்மீகம்
*பழனி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கார்த்திகை மகா தீபம்: தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் – தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
🕒 24 நவ., 2026, 01:53 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •*பழனி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கார்த்திகை மகா தீபம்: தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் – தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








