Settings

முகப்பு/ஆன்மீகம்/திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
ஆன்மீகம்

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

🕒 24 நவ., 2026, 01:24 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் இன்று மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. பரணி தீபம் ஏற்றம் மகா தீபத்தை முன்னிட்டு இன்று 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்பட்டது. மாலையில் பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதி முன்பாக உள்ள தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். இதைத்தொடர்ந்து 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே வந்து ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பக்தர்களுக்கு காட்சி தருவார். அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தார்கள். மகா தீபம் ஏற்றப்பட்டதும் கிரிவலப்பாதையில் இருக்கும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்கினார்கள். தொடர்ந்து மகாதீபம் மற்றும் இதர நாட்களில் பக்தர்கள் மலை ஏற தடை செய்யப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். திருவிழாவையொட்டி நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
திருவண்ணாமலை மகா தீபம்: காடா துணிக்கு சிறப்பு வழிபாடு!ஆன்மீகம்

திருவண்ணாமலை மகா தீபம்: காடா துணிக்கு சிறப்பு வழிபாடு!

Nivedha🕒 நவ. 24
தீபத் திருவிழா: கொப்பரைக்கு பூஜை நடைபெற்றதால் பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு!ஆன்மீகம்

தீபத் திருவிழா: கொப்பரைக்கு பூஜை நடைபெற்றதால் பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு!

Vijay🕒 நவ. 24
திருவண்ணாமலை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டதுஆன்மீகம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

Srinivasan🕒 நவ. 24
திருப்பரங்குன்றத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 144 தடை உத்தரவுக்கிடையே கிரிவலம்!ஆன்மீகம்

திருப்பரங்குன்றத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 144 தடை உத்தரவுக்கிடையே கிரிவலம்!

Vijay🕒 நவ. 24
ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் அரசு கலைக்கல்லூரி வேண்டி கொதித்தெழுந்த மாணவர்கள்!தமிழ்நாடு

ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் அரசு கலைக்கல்லூரி வேண்டி கொதித்தெழுந்த மாணவர்கள்!

Muralidharan🕒 நவ. 24
நாளை புதன்கிழமை மின் தடை: எந்தெந்த ஊர்களில் மின்சாரம் இருக்காது?செய்திகள்

நாளை புதன்கிழமை மின் தடை: எந்தெந்த ஊர்களில் மின்சாரம் இருக்காது?

Ramachandran🕒 நவ. 24
விலையில்லா வேஷ்டி, சேலை தரம் குறித்து அமைச்சர் விஜய் பாலாஜி நேரில் ஆய்வு!செய்திகள்

விலையில்லா வேஷ்டி, சேலை தரம் குறித்து அமைச்சர் விஜய் பாலாஜி நேரில் ஆய்வு!

Dinesh🕒 நவ. 24
தஞ்சையில் பரபரப்பு: போலீஸ் பாதுகாப்பு நடுவே அரசு மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்கள் மோதல்!நகரங்கள்

தஞ்சையில் பரபரப்பு: போலீஸ் பாதுகாப்பு நடுவே அரசு மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்கள் மோதல்!

Rajan🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔