ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள குருராஜ்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் சுமங்கலி பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, தங்களது மாங்கல்யம் நிலைக்கவும், குடும்பத்தில் வருமானம் பெருகி மகிழ்ச்சியுடன் வாழவும் வேண்டி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
விழாவையொட்டி கோவில் வளாகத்தில் லட்சுமி தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஒரே நேரத்தில் 108 பெண்கள் ஒன்றுகூடி சுமங்கலி பூஜை செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்து வழிபட்டனர்.

