சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/ஆன்மீகம்/ஆடி அமாவாசையை முன்னிட்டு பாபநாசத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்
ஆன்மீகம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு பாபநாசத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்

The News Outlook
🕒 12 ஆக., 2026, 05:04 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஆடி அமாவாசையை முன்னிட்டு பாபநாசத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்தால் அவர்களிடம் இருந்து ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் இந்த தர்ப்பணம் செய்வதால் பாவங்கள் நீங்கி மோட்சம் பிறக்கும் என்பதும் நம்பிக்கை. அதன்படி இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் எள், தண்ணீரை இறைத்தும், அரிசி மாவில் பிண்டம் அமைத்தும் அவர்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி சுவாமி தரிசனமும் செய்தனர். இதையொட்டி அதிகாலையிலேயே நடைதிறக்கப்பட்டு பாபநாச சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் அவர்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பாபநாசத்தில் குவிந்ததால் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் அம்பாசமுத்திரம் கடையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரை ஓரங்களில் காலமானார் அவர்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருவது குறிப்பிடப்பட்டது

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔