அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இரும்புலகுறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு மங்கள விநாயகர், பாலமுருகன் மற்றும் மகா மாரியம்மன் ஆலயத்தில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி முதலில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர்.
இதையடுத்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் கோவில் வளாகத்தைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர் மகா மாரியம்மன், விநாயகர் மற்றும் பாலமுருகன் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, முதலாம் ஆண்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்த விழாவில் இரும்புலகுறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் சுவாமிகளை தரிசனம் செய்து வழிபட்டு அருள்பெற்றனர்.

