சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/ஆன்மீகம்/திருத்தங்கல் கருநெல்லிநாதர் கோவிலில் 50 ஜோடிகளுக்கு திருமணம்!
ஆன்மீகம்

திருத்தங்கல் கருநெல்லிநாதர் கோவிலில் 50 ஜோடிகளுக்கு திருமணம்!

🕒 24 ஆக., 2026, 06:12 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருத்தங்கல் கருநெல்லிநாதர் கோவிலில் 50 ஜோடிகளுக்கு திருமணம்!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள பிரசித்தி பெற்ற கருநெல்லிநாதர்–மீனாட்சி அம்பிகை திருக்கோவிலில், ஆவணி மாதத்தின் முக்கிய முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 50 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்காக வந்திருந்த ஜோடிகளின் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், கோவில் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் திருமண நிகழ்வுகள் நடைபெற்றன.

முகூர்த்த தினம் என்பதால் திருமண வீட்டாருடன் ஏராளமான பக்தர்களும் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் திருவிழா போல் காட்சியளித்தது.

அதிகாலை முதலே பக்தர்கள் மற்றும் திருமண ஜோடிகளின் வருகை அதிகரித்ததால், சிவகாசி–விருதுநகர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔