சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/சமூக நீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் – விருதுநகரில் புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்
அரசியல்

சமூக நீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் – விருதுநகரில் புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்

🕒 30 செப்., 2026, 10:25 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சமூக நீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் – விருதுநகரில் புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்
✨

AI Highlights

  • •சமூக நீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகரில் புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

சமூக நீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய தமிழகம் கட்சி சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் அறிவுறுத்தலின்படி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

அதன் ஒரு பகுதியாக விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, அமைச்சர் வன்னியரசுவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

அமைச்சர் கருத்தை திரும்பப் பெற வேண்டும்

ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஷியாம் கிருஷ்ணசாமி, சமூக நீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது தொடர்பான அமைச்சர் வன்னியரசுவின் கருத்தை உடனடியாக திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மாட்டிறைச்சி குறித்து அமைச்சர் தெரிவித்த கருத்து தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுக்கு எதிரானது என அவர் விமர்சித்தார். மாணவர்கள் கோரிக்கை விடுத்ததால் இந்த கருத்தை தெரிவித்ததாக கூறுவது ஏற்கத்தக்கதல்ல என்றும், இதுபோன்ற கருத்துகளை அமைச்சர்கள் தெரிவிப்பதை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் ஷியாம் கிருஷ்ணசாமி கூறினார்.

மேலும், சமூக நீதி விடுதிகளில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தரமான உணவு, படிப்பதற்கான வசதிகள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் நூலகம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆதிதிராவிடர் மாணவர்கள் தொடர்பாக குறிப்பிட்ட உணவு முறையை மட்டுமே முன்னிறுத்தும் வகையில் தவறான பிம்பத்தை உருவாக்குவதை தங்கள் கட்சி மற்றும் தோழமை அமைப்புகள் ஏற்காது என்றும் ஷியாம் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

மாணவர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதை தவிர்த்து அமைச்சர் வன்னியரசு தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதே தங்களது முதன்மையான கோரிக்கை என்றும் அவர் கூறினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔