சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/தமிழக வெற்றிக் கழகம் நீர்க்குமிழி போன்றது: நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்.
அரசியல்

தமிழக வெற்றிக் கழகம் நீர்க்குமிழி போன்றது: நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்.

🕒 5 அக்., 2026, 09:23 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
தமிழக வெற்றிக் கழகம் நீர்க்குமிழி போன்றது: நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்.
✨

AI Highlights

  • •தமிழக வெற்றி கழகம் நீர்க்குமிழி போன்றது; 5 ஆண்டுகள் ஆட்சி நீடிக்க வாய்ப்பில்லை – நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் பேட்டி

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் பகுதிகளில் பிரசாரத்திற்குச் சென்று வந்ததாகவும், தமிழக வெற்றி கழகம் தற்போது மிகவும் பின்தங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழக வெற்றி கழகம் நீர்க்குமிழி போன்றது எப்போது தோன்றி எப்போது மறையும் என்பது தெரியாது . 234 சட்டமன்ற தொகுதிகளில் 8 இடங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்தார் மதுராந்தகத்திற்கு ஏற்கனவே பிரசாரம் செய்துவிட்டு மீண்டும் அங்கு செல்வது தோல்வி பயத்தைக் காட்டுகிறது மேலும், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது பேச்சில் பாஜக, திமுக என மாற்றி மாற்றி கூறி வருவதாகவும், சட்டமன்றத்திலும் சரியாக பேசுவதில்லை என்றும் அவர் விமர்சித்தார். தேர்தல் ஆணையம் தொடர்பான விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்றால் தேர்தல் ஆணையம் நன்றாக செயல்பட்டதாகவும் தோல்வியடைந்தால் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை என்றும் தாங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சிலர் கூறுவதாக தெரிவித்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரு தேர்தல் ஆணையர்களுடன் ஆலோசித்தே முடிவுகளை எடுத்து வருகிறார் பத்திரப்பதிவுத்துறை உள்ளிட்ட விவகாரங்களில் முந்தைய ஆட்சியில் நடந்ததாகக் கூறப்பட்ட நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது லஞ்சம் ஊழல் குறையவில்லை ஆனால் ஊழல் இல்லை என்பது போல் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது மேலும், குழந்தைகளை அரசியல் பிரசாரத்திற்கு பயன்படுத்தினர் மாநில நெடுஞ்சாலை பெயர் பலகையில் இந்திய எழுத்துக்கள் இடம்பெற்ற விவகாரம் தொடர்பான கேள்விக்கு தமிழகத்தில் ஹிந்தி பிரச்சார சபை அதிகளவில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்நிய மொழியை படித்து வரும் நாம் நமது நாட்டின் மொழியை தெரிந்து கொள்வது தவறில்லை என்றார் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முந்தைய அரசின் நிலைப்பாட்டையே தற்போதைய அரசும் பின்பற்றுகிறது திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டின் காரணமாகவே அவர்கள் ஆட்சியை இழந்தார்கள் தமிழகத்தில் தற்போதைய ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்குமா என்ற கேள்விக்கு, “அது போன்று தெரியவில்லை; வாய்ப்பில்லை ராசா " என நயினார் நாகேந்திரன் பதிலளித்தார் பேட்டியின் போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔