சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/“வருசநாட்டு எம்.எல்.ஏ. என்றே மக்கள் அழைக்கிறார்கள்” – மகாராஜன் எம்.எல்.ஏ. பேச்சு
அரசியல்

“வருசநாட்டு எம்.எல்.ஏ. என்றே மக்கள் அழைக்கிறார்கள்” – மகாராஜன் எம்.எல்.ஏ. பேச்சு

🕒 28 செப்., 2026, 05:56 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
“வருசநாட்டு எம்.எல்.ஏ. என்றே மக்கள் அழைக்கிறார்கள்” – மகாராஜன் எம்.எல்.ஏ. பேச்சு
✨

AI Highlights

  • •கடமலைக்குண்டு மலைகிராம மக்கள் போராட்டத்தில் பங்கேற்ற ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், மேகமலை விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் தனியாக குரல் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் நடைபெற்று வரும் மலைகிராம மக்களின் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், மேகமலை விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் தனியாக குரல் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மலைகிராம மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வனத்துறையினர் வெளியேற்றுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடமலைக்குண்டு பகுதியில் 2-வது கட்ட காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், மலைகிராம மக்களுக்கு ஆதரவாக பேசினார். மேலும், போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக ரூ.1 லட்சம் நிதியுதவியும் வழங்கினார்.

“தனி ஆளாக சட்டமன்றத்தில் பேசினேன்”

போராட்டத்தில் மகாராஜன் எம்.எல்.ஏ. பேசுகையில், “மேகமலை விவகாரத்தில் நான் தொடர்ந்து மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறேன். இந்தப் பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் பேச திட்டமிட்டிருந்தேன்.

நான் பேச வேண்டிய நாளில் எதிர்பாராத விதமாக திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஆனால், நான் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறவில்லை. சபாநாயகரும் நான் ஏன் வெளிநடப்பு செய்யவில்லை என்று கேட்டார்.

எனக்கு வாக்களித்த மக்களின் பிரச்சினை குறித்து பேச வேண்டும் என்பதற்காக, தனி ஆளாக நின்று மேகமலை விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பதிவு செய்தேன்” என்று தெரிவித்தார்.

“வருசநாட்டு எம்.எல்.ஏ. என்றுதான் அழைக்கிறார்கள்”

மேலும் அவர் கூறுகையில், “என்னை யாரும் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. என்று சொல்வது கிடையாது. வருசநாட்டு எம்.எல்.ஏ. என்றுதான் மக்கள் அழைக்கிறார்கள். அது உண்மைதான். நான் வருசநாட்டு எம்.எல்.ஏ. தான்.

திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நேரத்திலும், நான் தனியாக நின்று சட்டமன்றத்தில் பேசியது குறித்து கட்சித் தலைவர் கோபப்படுவாரோ என பயந்திருந்தேன். ஆனால், மக்கள் பிரச்சினைக்காக நான் தனியாக நின்று சட்டமன்றத்தில் பேசியதை மு.க.ஸ்டாலின் தனது மொபைலில் பார்த்து ரசித்ததாக அவரது அலுவலகத்தில் தெரிவித்தனர்” என்று கூறினார்.

“29-ம் தேதி சாதகமான தீர்ப்பு வரும்”

மேகமலை விவகாரம் தொடர்பான வழக்கில் வரும் 29-ம் தேதி மக்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்றும், எனவே மலைகிராம மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் மகாராஜன் எம்.எல்.ஏ. போராட்டத்தில் தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔