சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே 3 மாதமாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்திகள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே 3 மாதமாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The News Outlook
🕒 6 ஜூலை, 2026, 07:21 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே 3 மாதமாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஊராட்சியில் வடக்குத்தெரு மற்றும் நீராவி தெரு ஆகிய பகுதிகளில் நிலவிய குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கடந்த 3 மாதத்திற்கு முன் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்ய புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான குடிநீர் குழாய் பதிக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் கடந்த 3 மாதங்களாக அருகில் உள்ள கிராமத்திற்கு 2 கிலோமீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலைக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அருகில் உள்ள கிராமத்தினரும் குடிநீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று அருப்புக்கோட்டை மதுரை சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தினால் மதுரை அருப்புக்கோட்டை சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...