சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/முதல்வர் விஜய், தாயார் குறித்து சர்ச்சைப் பேச்சு! – நயினார் நாகேந்திரன் மீது சிறுமி புகார்.
செய்திகள்

முதல்வர் விஜய், தாயார் குறித்து சர்ச்சைப் பேச்சு! – நயினார் நாகேந்திரன் மீது சிறுமி புகார்.

🕒 17 ஆக., 2026, 09:00 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
முதல்வர் விஜய், தாயார் குறித்து சர்ச்சைப் பேச்சு! – நயினார் நாகேந்திரன் மீது சிறுமி புகார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து பொதுமேடையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் பெரியபேட்டை முனிசிபல் ரோடு பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவர், தனது 10 வயது மகள் சார்பில் இந்த மனுவை அளித்துள்ளார்.

"கடந்த 15.08.2026 அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயாரைக் குறிப்பிட்டுத் தனிப்பட்ட முறையில் பெண்களின் கண்ணியத்தைப் பாதிக்கும் வகையில் பேசியுள்ளார்.

அரசியலில் கொள்கை மற்றும் நிர்வாகம் சார்ந்த கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அதற்காக ஒரு அரசியல் தலைவரின் குடும்பப் பெண்களைக் இழுத்துப் பொதுமேடையில் பேசுவது வருந்தத்தக்கது. வளர்ந்து வரும் சிறு குழந்தைகள் மத்தியில் அரசியல் தலைவர்கள் நாகரிகமான பேச்சுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எனவே, இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகளை ஆய்வு செய்து, சட்டத்திற்குப் புறம்பாகப் பேசியிருந்தால் நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கவும், பொதுவாழ்வில் பொறுப்பான பேச்சை நிலைநிறுத்தவுமே இந்தப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔