சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/மாதத்தொகை தராமல் மிரட்டல்! – அதிமுக நிர்வாகி மீது ஆட்சியரிடம் பரபரப்பு மனு
செய்திகள்

மாதத்தொகை தராமல் மிரட்டல்! – அதிமுக நிர்வாகி மீது ஆட்சியரிடம் பரபரப்பு மனு

🕒 17 ஆக., 2026, 08:41 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மாதத்தொகை தராமல் மிரட்டல்! – அதிமுக நிர்வாகி மீது ஆட்சியரிடம் பரபரப்பு மனு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கேபிளை குத்தைகைக்கு பெற்று விட்டு உரிய மாதத்தொகையை தர மறுத்து மிரட்டல் விடுப்பதாக அ.இ.அ.தி.மு.க.நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

விருதுநகர் குருசாமி கொத்தனார் தெருவைச் சேர்ந்தவர் சங்கையா. கேபிள் டிவி நடத்தி வந்தார்.இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து அவரது மனைவி சரோஜா நடத்தி வந்தார். அவரை அணுகிய அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த விருதுநகர் நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் நாகசுப்பிரமணியன் தான் கேபிளை குத்தைகைக்கு பெற்று நடத்த விரும்புவதாகவும் மாதாமாதம் உரிய தொகை செலுத்துவுதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த சரோஜினி அதற்குரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். சில ஆண்டுகளாக உரிய பணம் செலுத்தி வந்த நாகசுப்பிரமணியன் கடந்த 4 மாத காலமாக பணம் தரவில்லை.. இது குறித்து சரோஜினி கேட்ட போது கேபிள் அனைத்தும் தனது மகன் பெயரில் இருப்பதாகவும் பணம் தர முடியாது என்றும் அதிமுகவில் இருக்கிறேன் என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ந்து போன சரோஜினி நாகசுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்க கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவிடம் இன்று மனு அளித்தார்.

பேட்டி :- சரோஜினி

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔