விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலை வெடி விபத்துக்களை தடுக்க அதிகாரிகள் நடத்திய ஆய்வில் விதிமுறையை மீறியதாக நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இந்நிலையில் ஆய்வு என்ற பெயரில் கெடுபிடி செய்து பூட்டிய பட்டாசு தொழிற்சாலைகளை உடனே திறந்து, தொழிலாளர்களுக்கு வேலை வழங்கி, வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும், மீனவர்களுக்கு, மீன்பிடி தடைகாலங்களில் வழங்கப்படும் நிவாரணத்தை போன்று, விபத்து ஏற்படும் காலங்களில் பட்டாசு தொழிலாளர்களுக்கு அரசே நிவாரணம் வழங்க வேண்டும், பசுமை தீர்ப்பாணையம் உத்தரவின்படி, பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்தில் இறந்த தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.20 லட்சம் வழங்க வலியுறுத்தி இன்று சிவகாசி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏ.ஐ.டி.யூ.சி பட்டாசு தொழிலாளர்கள் சங்கதினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். பேட்டி: ராமசாமி- சிபிஐ முன்னாள் எம்.எல்.ஏ

