விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கிய வீ த லீடர் அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
“மண்ணுக்கான மக்களுக்கான – பசுமையான உலகை உருவாக்குவோம்” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த பேரணியில், சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க வேண்டும், மரங்கள் மற்றும் செடிகளை அதிகளவில் வளர்த்து பசுமையை பாதுகாக்க வேண்டும் என்பதைக் கூறி பங்கேற்பாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் தொடங்கிய பேரணி, நகரின் பிரதான சாலை மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று சாத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை நடைபெற்றது.
இந்த பேரணியை வீ த லீடர் அமைப்பின் சாத்தூர் கிளை நிர்வாகிகள் அய்யாசாமி, அருண் பாண்டி, மாதவன் ஆகியோர் வழிநடத்தினர். சாத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாசகங்களை முழக்கங்களாக எழுப்பியவாறு பேரணியில் பங்கேற்றனர்.
முக்கிய அம்சங்கள்
- சாத்தூரில் வீ த லீடர் அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் பேரணி
- “மண்ணுக்கான மக்களுக்கான” உறுதிமொழி ஏற்பு
- மரங்கள் வளர்ப்பு, மாசற்ற உலகை உருவாக்க வலியுறுத்தல்
- முக்குராந்தல் முதல் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை பேரணி

