ராணிப்பேட்டையில் அமைந்துள்ள பின் குஷன் மழலையர் பள்ளியில், 80வது சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஈகிள் கிளினிக் மருத்துவர் டாக்டர் வெங்கடேசன், தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
விழாவில் உரையாற்றிய டாக்டர் வெங்கடேசன், நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் குழந்தைகளுக்கு தேசப்பற்று, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை சிறு வயதிலிருந்தே வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த பள்ளி முதல்வர் டாக்டர் விஜயராணி, தாளாளர் சாலை அருண் மெய்யழகன் மற்றும் நந்தினி சாலை அருண் ஆகியோருக்கு அவர் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.
மேலும், மாணவர்களுக்கு நடன நிகழ்ச்சிகள் மற்றும் பேச்சுப் போட்டிகளுக்காக பயிற்சி அளித்த ஆசிரியர்களையும், விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்ற பெற்றோர்களையும் பாராட்டி சுதந்திர தின நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.

