சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/அரியலூரில் 100 அடி உயர கிரேனில் தேசியக் கொடி: தேசப்பற்றை வெளிப்படுத்தும் வைரல் காட்சிகள்
செய்திகள்

அரியலூரில் 100 அடி உயர கிரேனில் தேசியக் கொடி: தேசப்பற்றை வெளிப்படுத்தும் வைரல் காட்சிகள்

🕒 17 ஆக., 2026, 06:56 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அரியலூரில் 100 அடி உயர கிரேனில் தேசியக் கொடி: தேசப்பற்றை வெளிப்படுத்தும் வைரல் காட்சிகள்

AI Highlights

  • அரியலூரில் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 100 அடி உயர கிரேனில் தேசியக் கொடி ஏற்றிய காட்சி மற்றும் மூவர்ண மின் விளக்கு அலங்காரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரியலூர் மாவட்டத்தில் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்றி, மூவர்ண மின் விளக்குகளால் அலங்கரித்து தேசப்பற்றை வெளிப்படுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அவற்றில் குறிப்பாக, 100 அடி உயரம் கொண்ட கனரக கிரேனில் தேசியக் கொடியை ஏற்றிய காட்சி பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. காலை நேரத்தில் தேசியக் கொடியை முறையாக ஏற்றி, மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன் மரியாதையுடன் இறக்கி பாதுகாத்தது பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

மேலும், தொழிற்சாலை வளாகங்கள் முழுவதும் இந்திய தேசியக் கொடியின் மூவர்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிற மின் விளக்குகள் ஒளிரவிடப்பட்டு, சுதந்திர தினக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

தாய் நாட்டின் மீது கொண்டுள்ள பற்றையும், தேசியக் கொடியின் மீதான மரியாதையையும் வெளிப்படுத்தும் இந்த முயற்சி, தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களின் தேசப்பற்று உணர்வை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔