விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 18, 20, 21, 22வது வார்டுக்குட்பட்ட திருத்தங்கல் சத்யா நகர், கே.கே.நகர், முனீஸ்வரன் காலனி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பகுதியில் வழக்கமாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த 4 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக காலிக்குடங்களுடன் தெருவில் நின்று ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பெண்கள் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்றால் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என காலிக்குடங்களுடன் பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
The News Outlook
🕒 5 ஆக., 2026, 05:58 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
