திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை குடிநீர் ஏற்று நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் காரணமாக, ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் காவிரி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனால், மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் இரண்டு நாட்கள் குடிநீர் வழங்கப்படாது. ஜூலை 8 முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கும் என்றும், பொதுமக்கள் தேவையான குடிநீரை முன்கூட்டியே சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்திகள்
குடிநீர் விநியோகம் இரண்டு நாட்கள் நிறுத்தம் – திருச்சி மாநகராட்சி அறிவிப்பு
The News Outlook
🕒 4 ஜூலை, 2026, 02:24 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
