விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாணார்பட்டி கிராமத்தில் பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் திரு. S.P. செல்வம் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, கிராமத்தில் உள்ள மயானம் மற்றும் சாலை வசதிகள், புதிய பேருந்து வழித்தடம், மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகளைப் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.
கிராம மக்களிடம் நேரில் சென்று குறைகளைக் கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர், பொதுமக்களின் இந்தக் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.









