மதுரை திருப்பரங்குன்றத்தில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், தீபத் தூண் தீபம் தொடர்பான சர்ச்சைகளால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இன்று மலை மீது செல்ல முயன்ற நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 6 சுற்றுலாப் பயணிகள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மலை மீது ஏறுவதற்கு முறையான அனுமதி கடிதம் இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் தங்களது கடவுச் சீட்டைச் (பாஸ்போர்ட்) சமர்ப்பித்து கோவில் அலுவலகத்தில் அனுமதி பெற்று வருமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். மேலும், பாதுகாப்பு மற்றும் விழாக் ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு, திருவிழா முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு வருமாறும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.









