Settings

முகப்பு/செய்திகள்/தூங்கிக் கொண்டிருந்த கணவரை அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்த மனைவி கைது!
செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்த கணவரை அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்த மனைவி கைது!

🕒 23 நவ., 2026, 06:25 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தூங்கிக் கொண்டிருந்த கணவரை அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்த மனைவி கைது! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருச்சி ஏர்போர்ட் அருகே குடும்பத் தகராறு காரணமாகத் தூங்கிக் கொண்டிருந்த கணவரின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருச்சி ஏர்போர்ட் அருகே குடும்பத் தகராறு காரணமாக, தூங்கிக் கொண்டிருந்த கணவரின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி ஏர்போர்ட் அருகேயுள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் செந்தில்குமார் (49). இவரது மனைவி கலாராணி (40). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவும் வழக்கம் போல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, செந்தில்குமார் இரவில் உறங்கிக் கொண்டிருந்தபோது, ஆத்திரமடைந்த கலாராணி வீட்டிலிருந்த அம்மிக்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில்குமாரின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவரைக் கொலை செய்ததாக கலாராணியைக் கைது செய்துள்ள போலீசார், குடும்பத் தகராறுக்கான உண்மையான காரணம் மற்றும் கொலைக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூங்கிக் கொண்டிருந்த கணவரை மனைவியே அம்மிக்கல்லால் தாக்கிப் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
சாலையில் கொந்தளித்த ஆண் மயில்கள்! ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்!செய்திகள்

சாலையில் கொந்தளித்த ஆண் மயில்கள்! ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்!

SASHVI🕒 நவ. 23
குளத்தில் மூழ்கி நபர் உயிரிழப்பு - திண்டுக்கல் மாவட்டத்தில் சோகம்!செய்திகள்

குளத்தில் மூழ்கி நபர் உயிரிழப்பு - திண்டுக்கல் மாவட்டத்தில் சோகம்!

VASANTHA🕒 நவ. 23
தெருநாய்களால் தொடரும் விபத்துகள்: வேடசந்தூரில் காய்கறி வியாபாரி படுகாயமடைந்த சோகம்!செய்திகள்

தெருநாய்களால் தொடரும் விபத்துகள்: வேடசந்தூரில் காய்கறி வியாபாரி படுகாயமடைந்த சோகம்!

VASANTHA🕒 நவ. 23
ஆறுகளில் தண்ணீர் இல்லை, மீன்களும் மாயம்: அதளபாதாளத்தில் டெல்டா மீனவர்களின் வாழ்வாதாரம்!செய்திகள்

ஆறுகளில் தண்ணீர் இல்லை, மீன்களும் மாயம்: அதளபாதாளத்தில் டெல்டா மீனவர்களின் வாழ்வாதாரம்!

Rajan🕒 நவ. 23
7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா நாட்டவர் உட்பட 9 பேர் அதிரடி கைது!செய்திகள்

7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா நாட்டவர் உட்பட 9 பேர் அதிரடி கைது!

VASANTHA🕒 நவ. 23
இந்துக்களின் வழிபாட்டு உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிரடி காட்டிய இந்து முன்னணி!செய்திகள்

இந்துக்களின் வழிபாட்டு உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிரடி காட்டிய இந்து முன்னணி!

VASANTHA🕒 நவ. 23
பரபரப்பு: சாலையோரம் கிடந்த வியாபாரியின் சடலம் - போலீசார் விசாரணைசெய்திகள்

பரபரப்பு: சாலையோரம் கிடந்த வியாபாரியின் சடலம் - போலீசார் விசாரணை

Dinesh🕒 நவ. 23
வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.30 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணைசெய்திகள்

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.30 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை

Vijayaragavan🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔