விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்ய காவல்துறையினர் அனுமதி மறுப்பு.....* விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நல்லதங்காள் கோவிலில் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது அர்ச்சுனாபுரம் கிராமம். இக்கிராமத்தில் வறுமை காரணமாக தனக்கு பிறந்த ஏழு குழந்தைகளையும் கிணற்றில் வீசி விட்டு தற்கொலை செய்து கொண்ட நல்லதங்காளை கிராம தெய்வமாக இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் வணங்கி வருகின்றனர். இக்கோவிலில் வழிபாடு செய்வது சம்பந்தமாக அர்ச்சுனாபுரம் மற்றும் அணைக்கரைப்பட்டி என்ற இரு கிராமங்களுக்கு பிரச்சனை நடந்து வந்தது. கடந்த 2025 ஆம் ஆண்டு நல்லதங்காள் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலையை சேதப்படுத்தி விட்டு சென்றனர்.இது தொடர்பான பிரச்சனை எழும் போது திருக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தியது. இதனையடுத்து கோவிலுக்கும் அர்ச்சுனாபுரம் கிராமத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவந்த இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தேர்தல் அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில் அர்ச்சுனாபுரம் கிராம மக்கள் செய்த சிலையை திருக்கோவிலில் பிரதிஷ்டை செய்ய இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். அதன் அடிப்படையில் நாளை நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்காக இன்று அர்ஜுனாபுரம் கிராம மக்கள் தங்கள் வடிவமைத்த சிலையை பிரதிஷ்டை செய்ய வந்துள்ளனர். மேலும் அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் யாரும் கோவிலுக்குள் வரக்கூடாது பூஜைகளில் கலந்து கொள்ள கூடாது என்று அர்ச்சுனாபுரம் மக்கள் தொடர்ந்து கூறி வந்ததால் அணைக்கரைப்பட்டி மக்கள் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிமன்றத்தை நாடினர். அர்ச்சுனாபுரம் கிராம மக்கள் அணைக்கரைப்பட்டி கிராம மக்களை வழிபாடு செய்ய கூடாது என்று சொல்லவில்லை. கும்பாபிஷேகம் தொடர்பான நிகழ்வுகளில் தங்களை மட்டுமே இணைத்து கொள்ள வேண்டும் கோவில் தங்கள் ஊருக்கு சொந்தமானது என்று கூறுவதால் அணைக்கரைப்பட்டி கிராம மக்கள் அர்ச்சுனாபுரம் மக்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக கிராம மக்கள் மற்றும் காவல் துறையினர் கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்ய காவல்துறையினர் அனுமதி மறுப்பு.....
The News Outlook
🕒 8 ஜூலை, 2026, 08:01 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
