விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி செயல்பட்டு வருகிறது திருச்சுழி தெற்கு ஒன்றிய த.வெ.க செயலாளர் சிவக்குமார் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை மிகவும் தரம் தாழ்ந்து சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருவதாகவும், பள்ளி ஆசிரியைகளை மாபியா கும்பல் என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்துள்ளதாகவும் பள்ளி நிர்வாகத்தில் தலையிட்டு இடையூறு செய்வதாகவும், புகார் தெரிவித்து த.வெ.க ஒன்றிய செயலாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியரின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ரெட்டியபட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் சுமார் 250 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வரும் நிலையில் தற்போது த.வெ.க ஒன்றிய செயலாளரின் தலையீட்டால் தற்காலிகமாக பணிபுரிந்து வந்த எட்டு ஆசிரியைகள் தற்போது பணிக்கு வரவில்லை என்றும், அதனால் பள்ளி மாணவ மாணவிகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் வேதனையுடன் கூறினர். மேலும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்களுடன் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் த.வெ.க ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தங்களிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று பெற்றோர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டி பகுதியில் த.வெ.க ஒன்றிய செயலாளரை கண்டித்து அரசுப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்.
The News Outlook
🕒 3 ஆக., 2026, 10:06 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
