சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/ஊராட்சி செயலாளர்களை லெப்ட் ரைட் வாங்கிய விருதுநகர் தவெக சட்டமன்ற உறுப்பினர்.
செய்திகள்

ஊராட்சி செயலாளர்களை லெப்ட் ரைட் வாங்கிய விருதுநகர் தவெக சட்டமன்ற உறுப்பினர்.

The News Outlook
🕒 9 ஜூலை, 2026, 12:13 PM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
ஊராட்சி செயலாளர்களை லெப்ட் ரைட் வாங்கிய விருதுநகர் தவெக சட்டமன்ற உறுப்பினர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஊராட்சி செயலாளர்களை லெப்ட் ரைட் வாங்கிய விருதுநகர் தவெக சட்டமன்ற உறுப்பினர்.விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை நான்காகப் பிரித்து வாங்குவதற்கான பிரத்யேகக் குப்பைத் தொட்டிகளைத் தூய்மைக் காவலர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர்களை நோக்கிப் பேசிய விருதுநகர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் செல்வம், "தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர்களோ, கவுன்சிலர்களோ, வார்டு உறுப்பினர்களோ இல்லாத சூழலில், ஊராட்சி செயலாளர்களாகிய நீங்கள்தான் தலைவராகவும், உறுப்பினராகவும் இருந்து செயல்பட்டு வருகிறீர்கள். தூய்மைப் பணியாளர்களை ஒருங்கிணைத்து, எந்தெந்தத் தெருக்களுக்குச் செல்ல வேண்டும் என்று வழிநடத்த வேண்டிய பொறுப்பு உங்களுடையது. யாருமே தங்களது பொறுப்புகளை இதுவரை சரியாக செய்யவில்லை. உங்கள் ஊராட்சிக்கு தேவையான எதையுமே இதுவரை கேட்டு பெறுவதற்கான நடவடிக்கையும் நீங்கள் எடுக்கவில்லை. நான் பொறுப்பேற்றதில் இருந்து 'குடிநீர் தட்டுப்பாடு இல்லாத, குப்பைகள் இல்லாத, நோய் நொடிகள் இல்லாத விருதுநகரை உருவாக்க வேண்டும்' எனக் தொடர்ந்து கூறி வருகிறேன். நான் வந்து 50 நாட்கள் ஆகிவிட்டன. இந்த 50 நாட்களில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? உங்கள் பகுதியில் குப்பைகளோ, சாக்கடை அடைப்போ இல்லை என்றும், குடிநீர் விநியோகம் சீராக உள்ளது என்றும் உங்களில் யாராவது ஒருவராவது தைரியமாகச் சொல்ல முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு ஊராட்சியிலும் ஐந்து சென்ட் நிலத்தையாவது ஒதுக்கி, ஜேசிபி இயந்திரம் மூலம் சமன்படுத்தி, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளைப் பிரித்துச் சேகரிப்பதற்கான மையங்களை உருவாக்க வேண்டும். ரோசல்பட்டி, பாவாளி, சிவஞானபுரம் போன்ற முக்கிய ஊராட்சிகளின் குப்பைகளை நகராட்சியின் மறுசுழற்சி மையத்திலேயே கொட்டுவதற்குக் காஸ்ட்லி அனுமதி வாங்கித் தந்துள்ளோம். ஆனால், அதை இன்னும் யாரும் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை" என்று அதிருப்தி தெரிவித்தார். தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்களின் ஊதியம் மிகவும் குறைவாக உள்ளது என்பதை நான் அறிவேன். டாஸ்மாக் பணியாளர்களுக்கு 25% ஊதியம் உயர்த்தப்பட்டது போல, தூய்மைப் பணியாளர்களுக்கும் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை மனுவாகக் கொடுங்கள். நமது உள்ளாட்சித் துறை, நீர்வளத்துறை அமைச்சரிடம் பேசி, அந்த கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றித் தருகிறேன்." "நான் எந்த ஊராட்சி செயலாளருக்குத் தொலைபேசியில் அழைத்தாலும், 'மக்கள் மோட்டார் வைத்துத் தண்ணீர் உறிஞ்சுகிறார்கள், குப்பைகளைக் கொட்டுகிறார்கள்' என்ற பிரச்சினைகளை மட்டுமே சொல்கிறீர்களே தவிர, அதற்கான தீர்வை யாரும் சொல்வதில்லை. தண்ணீரைத் திருடுபவர்கள் யார், விதிகளை மீறி குப்பை கொட்டுபவர்கள் யார் என்று எனக்குப் பட்டியல் கொடுங்கள்; அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் கடுமையான நடவடிக்கை எடுப்போம். ஊராட்சி செயலாளர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, தூய்மையான விருதுநகரை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். மேலும் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்காத பொதுமக்களுக்கு முதல் முறை ரூ 500 , இரண்டாவது முறை ரூ 1000, மூன்றாவது முறை 2000 அதற்குமேலும் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்காத பொதுமக்கள் மீது வழக்குகள் பதிவு செய்து சிறைதண்டனை அனுபவிக்கவும் வாய்ப்புள்ளது என்று ஊராட்சி ஒன்றியம் சார்பாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...