Settings

முகப்பு/செய்திகள்/போதை ஒழிப்பு மற்றும் சாலை விதிகள் குறித்து வேலூர் மாணவர்களுக்கு முக்கிய அறிவுரை!
செய்திகள்

போதை ஒழிப்பு மற்றும் சாலை விதிகள் குறித்து வேலூர் மாணவர்களுக்கு முக்கிய அறிவுரை!

🕒 4 நவ., 2026, 03:03 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
போதை ஒழிப்பு மற்றும் சாலை விதிகள் குறித்து வேலூர் மாணவர்களுக்கு முக்கிய அறிவுரை! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •வேலூர் மாவட்டம் அணைக்கட்டு எம்.ஜி.ஆர் அரசு கல்லூரியில் திடக்கழிவு மேலாண்மை, போதை ஒழிப்பு மற்றும் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திடக்கழிவு மேலாண்மை, போதை ஒழிப்பு மற்றும் சாலைப் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் சுகன்யா தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில், வனச்சரக அலுவலர் பாபு மற்றும் வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு டி.எஸ்.பி. நந்தகுமார் பேசியதாவது:

"வருங்காலச் சமூகத்தைக் கட்டமைக்கும் பொறுப்பு மாணவர்களாகிய உங்கள் கைகளில் உள்ளது. அதற்கு முதலில் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் தேவையற்ற குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும். போதைப்பப்பழக்கம் கண்ணுக்குத் தெரியாத கொடிய ஆயுதம் போன்றது. அதற்கு ஒருபோதும் அடிமையாகக் கூடாது. நமது கிராமம் மற்றும் சுற்றுப்புறங்களில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இருந்தால், மாணவர்கள் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நல்வழிப்படுத்த வேண்டும்."

"இயற்கையைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும். வனப்பகுதிகளில் வாழும் உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பு. வனப்பகுதிகளில் மது பாட்டில்களை உடைப்பது, பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டுவது போன்ற செயல்கள் சுற்றுச்சூழலுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதேபோல், அனைவரும் சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். சாலை விதிகளை மீறிச் செயல்படுவது தங்களை மட்டுமின்றி, மற்றவர்களையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. எனவே, சாலை விதிகளை மதிப்பது, வனங்களைப் பாதுகாப்பது, போதைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருப்பது ஆகிய மூன்று விஷயங்களையும் ஒவ்வொருவரும் கடைபிடித்தால் சமூகத்தில் குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்க முடியும்," என்றார்.

இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சாலைப் பாதுகாப்பு, போதை ஒழிப்பு மற்றும் வனப்பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வனத்துறையினர், காவல்துறையினர், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!செய்திகள்

தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!

Rajan🕒 நவ. 22
வாக்காளர் பட்டியல் திருத்தம் 2027: வால்பாறையில் நடைபெற்ற சிறப்பு முகாம்!செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் 2027: வால்பாறையில் நடைபெற்ற சிறப்பு முகாம்!

S. Ravichandran🕒 நவ. 22
சீர்திருத்தி ஒரு வாரமே ஆன நிலையில் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் - கொந்தளிப்பில் பொதுமக்கள்!செய்திகள்

சீர்திருத்தி ஒரு வாரமே ஆன நிலையில் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் - கொந்தளிப்பில் பொதுமக்கள்!

Rajan🕒 நவ. 22
பணியில் இருந்த பாதுகாவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. திருச்சி மாவட்டத்தில் சோகம்!நகரங்கள்

பணியில் இருந்த பாதுகாவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. திருச்சி மாவட்டத்தில் சோகம்!

Ramachandran🕒 நவ. 22
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔