Settings

முகப்பு/செய்திகள்/தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!
செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

🕒 22 நவ., 2026, 12:55 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •தஞ்சாவூரில் நவம்பர் 24 அன்று மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் நேரில் மனு அளிக்கலாம்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நகரில் மின்சாரம் தொடர்பான குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணும் வகையில், வருகிற 24ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம்.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தஞ்சாவூர் செயற்பொறியாளர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தஞ்சாவூரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 24ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜெயந்தி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் மின்சாரம் தொடர்பான புகார்கள் நேரடியாகப் பெறப்பட உள்ளன.

பங்கேற்கக்கூடிய பகுதிகள்:

தஞ்சாவூர் நகரின் தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கரந்தை, பள்ளியக்கிரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி, நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, காந்திஜி சாலை, மருத்துவக்கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரகுமான் நகர், ரெட்டிப்பாளையம் சாலை, சிங்கப்பெருமாள்குளம், ஜெபமாலைபுரம், வித்யாநகர், மேலவெளி ஊராட்சி, தமிழ்ப் பல்கலைக்கழக வளாகக் குடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பேருந்து நிலையம், திருவேங்கடநகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

மனு அளிக்கப்பட வேண்டிய புகார்கள்:

மின்சார இணைப்பு தொடர்பான பிரச்சினைகள், குறைந்த மின்னழுத்தம், அடிக்கடி ஏற்படும் மின்தடை, பழுதடைந்த மின்கம்பிகள், மின்மாற்றிகள் தொடர்பான கோரிக்கைகள், புதிய மின் இணைப்பு மற்றும் மின்கட்டணம் தொடர்பான புகார்கள் என மின்வாரியம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் தங்களது மனுக்களை நேரில் அளிக்கலாம்.

எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர் இந்தத் வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது குறைகளை நேரில் தெரிவித்து உரிய தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
சீர்திருத்தி ஒரு வாரமே ஆன நிலையில் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் - கொந்தளிப்பில் பொதுமக்கள்!செய்திகள்

சீர்திருத்தி ஒரு வாரமே ஆன நிலையில் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் - கொந்தளிப்பில் பொதுமக்கள்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
நகைக்கடைகளில் அதிரடி பாதுகாப்பு! கரூரில் காவல்துறையினர் எடுத்த முக்கிய முடிவு!நகரங்கள்

நகைக்கடைகளில் அதிரடி பாதுகாப்பு! கரூரில் காவல்துறையினர் எடுத்த முக்கிய முடிவு!

Anandakumar🕒 நவ. 22
அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்துஅரசியல்

அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்து

Dinesh🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔