Settings

முகப்பு/செய்திகள்/நெல்லை நயினார் குளத்தில் படகு சவாரி தொடக்கம்: விவசாயிகள் கடும் எதிர்ப்பு!
செய்திகள்

நெல்லை நயினார் குளத்தில் படகு சவாரி தொடக்கம்: விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

🕒 22 நவ., 2026, 04:54 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நெல்லை நயினார் குளத்தில் படகு சவாரி தொடக்கம்: விவசாயிகள் கடும் எதிர்ப்பு! - படம் 1 - The News Outlook
📸1 / 4
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (4)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருநெல்வேலி நயினார் குளத்தில் படகு சவாரியை அமைச்சர் ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தாமிரபரணி படகு சவாரி குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலி டவுன் பகுதியில் அமைந்துள்ள நயினார் குளத்தில், நீண்ட நாள் கோரிக்கையான படகு சவாரி இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு படகு சவாரியைப் பார்வையிட்டனர். தற்போது ஒரு பெரிய படகு மற்றும் நான்கு சிறிய படகுகள் என மொத்தம் ஐந்து படகுகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்கப்பட உள்ளன. இதற்கான கட்டண விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தாமிரபரணி ஆற்றில் படகு சவாரி தொடங்குவதற்கான அரசாணை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்திற்குப் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ள அதே வேளையில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, குளத்தில் உள்ள பறவைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின்சாரப் படகுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேசமயம், படகு சவாரியால் பாசன வசதி பாதிக்கப்படும் மற்றும் நீர்நிலை மாசுபடும் எனக் கூறி, விவசாய சங்கத்தினர் இந்தத் திட்டத்திற்குத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து முதலமைச்சரிடம் முறையிடப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!செய்திகள்

தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!

Rajan🕒 நவ. 22
சீர்திருத்தி ஒரு வாரமே ஆன நிலையில் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் - கொந்தளிப்பில் பொதுமக்கள்!செய்திகள்

சீர்திருத்தி ஒரு வாரமே ஆன நிலையில் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் - கொந்தளிப்பில் பொதுமக்கள்!

Rajan🕒 நவ. 22
பணியில் இருந்த பாதுகாவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. திருச்சி மாவட்டத்தில் சோகம்!நகரங்கள்

பணியில் இருந்த பாதுகாவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. திருச்சி மாவட்டத்தில் சோகம்!

Ramachandran🕒 நவ. 22
அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்துஅரசியல்

அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்து

Dinesh🕒 நவ. 22
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔