கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையை அடுத்த அக்காமலை எஸ்டேட் பகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2027-க்கான இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்தச் சிறப்பு முகாமில் அப்பகுதி வாக்காளர்கள் மிகுந்த ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்கள் பெயர்களைச் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் தொடர்பான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.









