விருதுநகரில், “வந்தே மாதரம்” பாடலை அவமதித்ததாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த தலைவர் சோனியா காந்தி மீது குற்றச்சாட்டு முன்வைத்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டனப் பேரணி மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக கிழக்கு மாவட்ட அமைப்பாளர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற பேரணியில், மாவட்ட பொறுப்பாளர் வெற்றிவேல், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பாக தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று தேசபந்து மைதானம் சென்றடைந்தது. பின்னர் அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காங்கிரஸ் தலைவர்களை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த நிகழ்ச்சியில் நகர மண்டல் அமைப்பாளர் கிருத்திகா, மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், மாநில வர்த்தகப் பிரிவு செயலாளர் காமாட்சி, இளைஞரணி மாநில செயலாளர் சரவணபாண்டியன், மாவட்டத் தலைவர் குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

