சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிற்சங்கத்தினர் போராட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் கைது!
செய்திகள்

பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிற்சங்கத்தினர் போராட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் கைது!

The News Outlook
🕒 10 ஆக., 2026, 07:36 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிற்சங்கத்தினர் போராட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் கைது!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை வண்ணாரப்பேட்டையில் தொமுச, ஏஐடியூசி, சிஐடியு, எச்எம்எஸ், உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளின் விலை பொருட்களுக்கு கட்டுபடுயான உறுதியான விலையை வழங்க வேண்டும் , கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை, மகாத்மா காந்தி ஊரக வேலை அளிப்பு திட்டம் என பெயரை மாற்றி 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன மறியல் போராட்டம் நடைபெற்றது .இதில் கலந்து கொண்டவர்கள் அரை நிர்வாணத்துடன் கையில் தட்டேந்தி பிச்சை எடுத்து வண்ணார்பேட்டை பாலத்தின் கீழ் இருந்து பேரணியாக சென்று பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தியும், ஒன்றிய அரசுக்கு எதிராகவும்,, ஆட்சியை விட்டு பிரதமர் மோடி வெளியேற வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தின் போது திடீரென ஒருவர் பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு போடப்பட்டிருந்த காவல்துறையின் பாதுகாப்பையும் மீறி கேட்டில் ஏறி அலுவலகத்திற்குள் செல்ல முயன்றதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200க்கும். மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔